என்னோட அந்த பழக்கத்தால் பட வாய்ப்பை இழந்தேன் !! ஓப்பனாக பேசிய பிரபல நடிகை !!


என்னோட அந்த பழக்கத்தால் பட வாய்ப்பை இழந்தேன் !!


ஓப்பனாக பேசிய பிரபல நடிகை !!


நடிகை ராதிகா ஆப்தே சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி திரைப்படம் மூலம் பிரபலமானவர்.தமிழ் சினிமாவில் இவர் அதிகமான படங்கள் நடிக்காவிட்டாலும் பாலிவுட் சினிமா கொண்டாடும் ஒரு நடிகையாகவே வலம்வருகிறார்.தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டும் இவர் பல கதை சார்ந்த படங்களில் நடித்துவருகிறார்.
தற்போது ஒருபடி மேலே சென்று ஹாலிவுட் சினிமாவிலும் கால்பதித்துள்ளார் அம்மணி.தி வெட்டிங் கெஸ்ட் மற்றும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.கதை தேர்வு செய்யும் வித்ததாலேயே இந்த உயரத்தை எட்ட முடிந்ததாக அம்மணி கூறுகிறார்.
நான்கு வருடங்களுக்கு முன்பு எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் ஏற்று நடித்திருப்பேன். இப்போது அப்படியில்லை. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் மற்றும் அர்த்தம் இல்லாத பாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகிறேன் என்கிறார்.
இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தில் நடித்த போது கிடைத்த ஓய்வு நேரத்தில் நிறைய பீர் குடித்தும், நிறைய உணவுகளை உண்டு வந்ததால் உடல் எடை கூடிவிட்டது .



இதனால் அந்த படத்தில் இருந்து விலக நேர்ந்தது என கூறிஉள்ளார். இதனால் பீர் குடிப்பது, தேவையற்ற உணவுகளை உண்பதும் தவறு என்பதை தான் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.


Popular posts
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு 15 கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிய FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி
Image
குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
Image
குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
Image
யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ஆர்.எஸ்.பாரதி யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Image