பத்திரிகை அலுவலகத்தில் செய்தியாளர்களை தாக்கிய பா.மா.க.நிர்வாகிகளுக்கு அனைத்து தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
டைம்ஸ்ஆப் இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் சென்று அங்குள்ள செய்தியாளர்களை தாக்கிய பா.மா.க. சார்ந்த கட்சி நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கின் றோம்.
நாடாளும் மன்ற உறுப்பினர் திரு.அன்புமணி அவர்கள் பாராளுமன்ற கூட்டத்திற்கு வருகை தரும் பதிவு அட்டவணையை வெளியிட்டது.அந்த வருகை பதிவில் திரு.அன்புமணி அவர்கள் வெறும் 15% மட்டுமே பாராளுமன்ற கூட்டத்திற்கு வருகைபுரிந்துள்ளார்.
இந்த உண்மை செய்தியை மிக துல்லியமாக உண்மை தன்மை கண்டறிந்து செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி துறையின் அலுவலகத்தை பா.மா.க. நிர்வாகிகள் சேர்ந்து அவர்களின் ரவுடி தனத்தை காட்டியது மட்டுமல்லாமல் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நாண்காம் தூணாக விளங்கும் பத்திரிகை துறை மிகவும் மோசமான நிலைக்கு பின்தங்கிஇருப்பதை நினைத்தால் மிக வேதனையாக உள்ளது.உண்மையை வெளி உலகிற்கு காமித்து கொடுத்தால் நாம் குற்றவாளிகள் இதுதான் ஜனநாயகம் மிக அருமை.எத்துனை அதிகாரம் இருந்தாலும்,கட்சி பலமிருந்தாலும் நாண்காம் தூண் இல்லை என்றால் அனைத்து துறைகளும் ஆட்டம் கண்டுவிடும்.
பத்திரிகைதுறை சார்ந்த நிறுவனம் மற்றும் நிரூபர்களை தாக்குவது இதுவே முதலும், முடிவாக இருக்க வேண்டும். டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் தாக்குதல் நடத்திய குண்டர்கள் அனைவரும் சட்டத்தின் முன் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என இதான் மூலமாக தெரியப்படுத்துகின்றோம்.
அனைத்துதலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது