குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

. கன்னியாகுமரி மாவட்டம். தக்கலை அருகே வாழவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், தொழிலாளி. இவருடைய மகன் சுபின்(வயது 17). சுபின் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை சுபின் நண்பர்களுடன் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள நீலகண்டசாமி கோவில் தெப்பகுளத்துக்கு குளிக்க சென்றார். அங்கு நண்பர்களுடன் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென சுபினை காணவில்லை இதனால் சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுபற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுபினை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுபின், குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது. இதற்கிடையே தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசாரும் விரைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து சுபினின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக உடலை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் போர்முனை நிருபர்:M.சுரேஷ் 9843512525


Popular posts
புதுவை மாநில அஇஅதிமுக கட்சியின்  மூன்னால் மாநில கழக பொருளாளர்  சுத்துக்கேணி A.பாஸ்கர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  CAPLIN பாயின்ட் லேபாரட்ரி லிமிடட்  மருந்து கம்பனி சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன
Image
பத்திரிகை அலுவலகத்தில் செய்தியாளர்களை தாக்கிய பா.மா.க.நிர்வாகிகளுக்கு அனைத்து தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு 15 கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிய FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி
Image
குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
Image
ரியல் எஸ்டேட் துறையை முன்னேற்ற பாதையில் கொண்டு வர முத்தரப்பு குழுவை தமிழக அரசு உருவாக்க FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி முதல்வருக்கு கோரிக்கை
Image