திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட  கண்ணபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.க.ஜமுனாபாரதி உதவி ஆசிரியர் திருமதி.பு.பா.சுனிதா வட்டார கல்வி அலுவலர் திரு.குருநாதன் இவர்கள் மூவரின் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு ருபாய் 1200  மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் முன்னிலையில் பள்ளியின் சார்பாக கடந்த 11.05.2020 அன்று வழங்கப்பட்டது


திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட  கண்ணபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.க.ஜமுனாபாரதி உதவி ஆசிரியர் திருமதி.பு.பா.சுனிதா வட்டார கல்வி அலுவலர் திரு.குருநாதன் இவர்கள் மூவரின் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு ருபாய் 1200  மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் முன்னிலையில் பள்ளியின் சார்பாக கடந்த 11.05.2020 அன்று வழங்கப்பட்டது பெற்றோர்களுடன் வருகை தந்த மாணவர்கள் சமூக விலகலை கடைபிடித்து பொருட்களை பெற்று சென்றனர் இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாவது பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை சார்ந்த பெற்றோர்களின் பிள்ளைகள் இந்த பள்ளியில் பயிலுவதாகவும் கோரோனா ஊரடங்கில் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து வருமானம் பாதிக்கபட்ட நிலையில் மாணவ மாணவிகளின் நலன் கருதி உதவியதாகவும் பதிவிட்டுள்ளார் மற்றும் அதே பள்ளி மாணவரின் தந்தையான திரு.சிபிகுமார் திரையரங்கில் பணிபுரியும் இவர் தற்போது ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் முடபட்டு கடந்த இரண்டு மாதமாக வேலை இல்லாமல் தவிக்கும் தருணத்தில் இந்த நிவாரண பொருட்கள் எனக்கும், என்னை போன்று மற்ற பெற்றோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக  இருக்கும் என தெரிவித்த அவர் பள்ளி தலைமை ஆசிரியர்க்கும்  நிர்வாகத்திற்கும் நன்றி கூறியுள்ளார் மேலும் இத்தகைய சூழலில் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


விஜயகுமார்.M.D
9884252309
போர்முனை நிருபர்