யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ஆர்.எஸ்.பாரதி யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஆர்.எஸ்.பாரதி யாரையோ திருப்தி படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தன் மீதான கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ் பாரதி கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்.15 ஆம் தேதி சென்னையில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது. கொரோனா சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது. கொரோனா விவகார ஊழல் பற்றி புகாரளிக்கப்படும். யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.


போர்முனை செய்தி நிருபர் அரவிந்தன்


Popular posts
புதுவை மாநில அஇஅதிமுக கட்சியின்  மூன்னால் மாநில கழக பொருளாளர்  சுத்துக்கேணி A.பாஸ்கர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  CAPLIN பாயின்ட் லேபாரட்ரி லிமிடட்  மருந்து கம்பனி சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன
Image
பத்திரிகை அலுவலகத்தில் செய்தியாளர்களை தாக்கிய பா.மா.க.நிர்வாகிகளுக்கு அனைத்து தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு 15 கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிய FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி
Image
குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
Image
ரியல் எஸ்டேட் துறையை முன்னேற்ற பாதையில் கொண்டு வர முத்தரப்பு குழுவை தமிழக அரசு உருவாக்க FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி முதல்வருக்கு கோரிக்கை
Image