குமரி மாவட்டத்தில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பபட்டனர்

குமரி மாவட்டத்தில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பபட்டனர்


.


கன்னியாகுமரி மாவட்டம்.


கொரோனா வைரஸ் ஊரடங்கு எதிரொலியாக தமிழகம் முழுவதும் குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமரி மாவட்டத்தில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பும் பணி இன்று  நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்-மூ.வடநரே மாநகர ஆணையர் சரவணகுமார் மற்றும் டிஆர்ஓ. ரேவதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்டம் போர்முனை நிருபர்:M.சுரேஷ்
9843512525